IPL 2024 ! மும்பை இந்தியன்ஸ் அணியில் உச்சகட்ட கோஷ்டி மோதல் ! பயிற்சி ஆட்டத்தில் பங்குபெறாத பும்ரா !

IPL 2024. IPL தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணி தான் மும்பை இந்தியன்ஸ். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு ஹர்டிக் பாண்டிய புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை கோபமடைய செய்தது.

இதனால் ரசிகர்கள் அணி நிர்வாகத்தை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் மும்பை அணி வீரர்கள் பலரும் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி முகாமில் பங்குபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹார்டிக் பாண்டியாவின் நியமனத்தை பும்ரா முழு மனதாக ஏற்றுக்கொள்ள வில்லை என கூறப்படுகிறது.

தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் ரூ.500 அபராதம் ! பிடிபட்டால் 3 மாத சிறை – தெரியாத திருமணத்தில் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு !

மும்பை அணியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால் பும்ரா பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் நேரடியாக அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment