தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் சீற்றம் ! சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல தடை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !
தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் சீற்றம். ராமேஸ்வரம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிதான் தனுஷ்கோடி. இந்த பகுதியில் அடிக்கடி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் இயற்கையாகவே காணப்படும். இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் தனுஷ்கோடி பகுதியில் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் எம்.ஆர்.புரம் மற்றும் அரிச்சல்முனை பகுதியில் உள்ள மணற்பரப்பு வரை கடல்நீர் அதிகரித்து காணப்படுகிறது.
தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் சீற்றம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மேலும் கடல் நீர் அதிகப்படியாக உட்புகும் காரணத்தால் கடல்வாழ் உயிரனங்கள், பாசிகள் மற்றும் செடிவகைகள் போன்ற பொருட்கள் அனைத்தும் சாலை முழுவதும் குப்பை போல தேங்கி கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடற்பரப்புக்கு அருகில் உள்ள சுற்றுச்சுவர் முழுவதும் கடல் சீற்றம் காரணமாக சேதமாக வாய்ப்பு இருப்பதாக அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் செல்ல தடை :
ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி பகுதியை காண்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் பொங்கியபடி உள்ளே வரும் காரணத்தால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் யாரும் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
LPG price: வணிகர்களே.., வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு?., ஒரு கேஸ் எவ்வளவு தெரியுமா?
மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அறிவிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.