இந்திய பகுதிகளுக்கு பெயர் வைத்த சீனா ! 30 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சீன மொழியில் பெயர் – உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

இந்திய பகுதிகளுக்கு பெயர் வைத்த சீனா. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக அருணாச்சலபிரதேசம் எல்லை தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. மேலும் அருணாச்சலபிரதேசம் எங்களுக்கு சொந்தமான பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திரமோடி அருணாச்சலபிரதேசம் சென்று பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சீனா அருணாச்சலபிரதேசத்தில் 30 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சீன மொழியில் பெயர் வைத்துள்ள சம்பவம் இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள அருணாச்சலபிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீன அரசாங்கம் அந்த நாட்டு மொழியில் பெயர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 குடியிருப்புகள், 12 மலைகள், 4 ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற பகுதிகளுக்கு சீனாவின் மாண்டரின் மற்றும் திபெத்திய மொழியில் பெயர் வைக்கப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டது.

ஆர்க்டிக் கடல் வளங்கள் 2030 க்கு பின் பெட்ரோல் கிடைக்குமா ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு …

மேலும் அருணாச்சலபிரதேசத்தை Zangnan என்ற பெயரில் அழைப்பது மட்டுமல்லாமல் திபெத்திய ஆட்சியின் ஒரு பகுதியாக கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment