காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை ! கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு !

காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை. தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை விளாம்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஷர்மிளா. இந்நிலையில் இவரது வீடு மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தில் உள்ளது. இதனையடுத்து இவரது வீட்டில் இருந்து 250 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ! அட்சய திருதியை முன்னிட்டு அதிகளவில் நகைகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி !

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஷர்மிளா வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Comment