முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை ! விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தகவல் !

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மேலும் கட்டப்பட்டு வரும் இந்த புதிய சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ரூ.110 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய பொதுப்பணி துறையால் கட்டப்பட்டு வரும் புதிய சிறப்பு மருத்துவமனை கட்டடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த புதிய மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சிறப்பு மருத்துவமனையின் தரைத் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு , நவீன சலவையகம், வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் இடம்பெறும்.

முதல் தளத்தில் பிரசவ வார்டுகள், மறுவாழ்வு வார்டுகள், ரத்த வங்கி, மூன்று அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன.

இரண்டு மற்றும் மூன்றாம் தளங்களில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட வார்டு, முழு உடல் பரிசோதனை, குழந்தைகள் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் தளங்களில் சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, நீரிழிவு வார்டு, இதயவியல் வார்டு, கேத் ஆய்வகம் அமைக்கப்படுகின்றன. கட்டடத்தின் அனைத்து தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் அமைக்கப்படுகின்றன. மேலும் இக்கட்டிடத்தில் அனைத்து தளங்களிலும் கழிப்பறை, பொதுக்கழிப்பறை மற்றும் நான்கு மின்தூக்கிகள் போன்ற ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment