சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு. தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையோரம் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாத சாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க கோரி சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் ! தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு !

மேலும் இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை வழக்கில் தமிழ்நாடு அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment