வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம் – சென்சார் போர்டு அனுமதி மறுத்த நிலையில் படக்குழு முடிவு !

வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம். படத்தின் தலைப்பிற்கு சென்சார் போர்டு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்ததால் படத்திற்கு வேறொரு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள வடக்கன் திரைப்படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் தலைப்பிற்க்கு மறுப்பு தெரிவித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள். படத்தின் தலைப்பினை மாற்றினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் தரமுடியும் என நிபந்தனை விதித்தனர்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு – இஸ்ரேல் கடும் எதிர்ப்பு !

இதன் காரணமாக மே மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் தற்போது ரயில் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment