டி20 உலகக்கோப்பை தொடர் 2024 ! வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் விலகல் !

டி20 உலகக்கோப்பை தொடர் 2024. அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 போட்டிகள் நடைபெறஉள்ளநிலையில் அனைத்து அணிகளும் தங்கள் அணியின் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஹோல்டர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஓபேத் மெக்காய் சேர்க்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம் – ஆளுநர் மாளிகை தகவல் !

மேலும் தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா தொடரிலும் ஓபேத் மெக்காய் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரோமேன் பவல் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment