இளம் பெண் தற்கொலை முயற்சி – Veera Talks Double X யூடியூப் சேனலின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது !

இளம் பெண் தற்கொலை முயற்சி. தற்போதுள்ள நிலையில் யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை என்பது பல மடங்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும் செய்தி பக்கங்கள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான சேனல்கள், சமையல் தொடர்பான சேனல்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்நிலையில் ஒரு யூடியூப் சேனலில் காதல் தொடர்பான பேட்டியை வெளியிட்டதால் இளம் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Veera Talks Double X என்ற யூடியூப் சேனலில் காதல் தொடர்பான போட்டி எடுத்து அதை சம்மந்தப்பட்டவரின் அனுமதியின்றி ஒளிபரப்பியதால் சம்மந்தப்பட்ட இளம் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அனுமதியின்றி ஒளிபரப்ப மாட்டோம் என உறுதி அளித்துவிட்டு சட்ட விரோதமாக இளம் பெண் பேட்டியளித்த விடியோவை சம்மந்தப்பட்ட யூடியூப் சேனல் வெளியிட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக சம்மந்தப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு – ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அறிவிப்பு !

இந்நிலையில் Veera Talks Double X என்ற யூடியூப் சேனலின் உரிமையாளர் மற்றும் பேட்டியெடுத்த பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment