நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை – பரபரப்பாகும் அரசியல் களம் !

நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை. தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிற கட்சிகள் 17 இடங்கள் முன்னிலை வகிக்கின்றன.

மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெறுவது அவசியமாகும். அந்த வகையில் பாரதிய ஜனதா கூட்டணி 294 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது . அந்த படி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சரத்பவார் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கர்நாடகா துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி – ஜூன் 9 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பு !

மேலும் தெலுங்கு தேசம் கட்சியானது இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியில் இடம் பெறும் எனக் கூறப்படுகிறது. அதன்படி இவ்வாறு நடந்தால் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Leave a Comment