தமிழ்நாடு திருவிழா 2024 (ஜூன் 12) – இந்த வார விசேஷங்கள் !

தமிழ்நாடு திருவிழா 2024 (ஜூன் 12). ஸ்ரீ குரோதி வருடமான இந்த ஆண்டு வைகாசி மாதம் 29 முதல் ஆனி மாதம் 3 தேதி வரை உள்ள விஷேச நாட்கள், திதி மற்றும் சிறப்பு நாட்கள், சிறப்பு தரிசனங்கள், சாமி ஊர்வலம், தனிப்பட்ட கோவில்களின் சிறப்பு நாள் இது போன்ற அனைத்தும் இந்த பதிவில் தரப்பட்டுள்ளது.

நாள்: கீழ் நோக்கு நாள்

திதி: பஞ்சமி திதி

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்மவாகனத்தில் பவனி.

குரங்கனி முத்துமாரியம்மன் பவனி.

சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம் .

நாள்: கீழ்நோக்கு நாள் , முகூர்த்த நாள்

திதி : சஷ்டி திதி

சென்னை ட்ரிப்ளிகேன் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன

சேவை.

திருத்தணி முருகனுக்கு பாலபிஷேகம்.

நாள்: கீழ் நோக்கு நாள்

திதி: சப்தமி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.

திருக்கோளக்குடி சிவபெருமான் புறப்பாடு.

திருமயம் ஆண்டாள் புறப்பாடு.

நாள்: மேல்நோக்கு நாள்

திதி: அஷ்டமி திதி

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

சிவகங்கை சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் சிவாலயம் மஹா கும்பாபிஷேகம் 2024!

திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக வாகனத்திலும், அம்மாள் கமலவாகனத்திலும் திருவீதி உலா.

சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

நாள்: மேல்நோக்கு நாள்

திதி: நவமி திதி

கானாடு காத்தான் சிவபெருமான் புறப்பாடு

சாத்தூர் வெங்கடேச பெருமான் திருவீதி உலா.

திருக்கோளக்குடி சிவன் கேடய சப்பரத்திலும், இரவு பூத வாகனத்திலும் உலா வருகிறார்.

நாள்: சமநோக்கு நாள், முகூர்த்த நாள்.

திதி: தசமி திதி.

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் ரிஷப வாகனத்தில் பவனி.

திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

மதுராந்தகம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம்.

Join WhatsApp Group

நாள்: சமநோக்கு நாள், முகூர்த்த நாள்.

திதி: ஏகாதசி திதி.

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை 2024.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனத்தில் பவனி.

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் விழா தொடக்கம்.

Leave a Comment