பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் – பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவிப்பு !

ஒடிசாவில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் பெறுவதாக பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஒடிசாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி தற்போது பாரதிய ஜனதா கட்சி ஒடிசாவில் ஆட்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு இனி ஆதரவு இல்லை என்ற அதிரடி முடிவை பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். தற்போது இக்கட்சிக்கு 9 ராஜ்ய சபா எம்பிக்கள் உள்ளனர். மேலும் பிஜு ஜனதா தளம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறவில்லை என்றாலும் இவர்கள் பாஜக அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் – சட்டப்பேரவையில் அறிவிப்பு

இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Leave a Comment