சனி வக்கிர பெயர்ச்சி 2024 – அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய ராசிகள் எது தெரியுமா ?

நமது அன்றாட வாழ்வில் சனி வக்கிர பெயர்ச்சி 2024 ஏதேனும் ஒரு நல்ல காரியத்தை காரியத்தை தொடங்கும் முன் ஜோதிடம் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக இருப்பது இந்த சனீஸ்வர பகவான் தான். ஒரு மனிதனின் ஆயுள் மற்றும் வாழ்வை தீர்மானிப்பது இந்த சனீஸ்வர பகவான் தான் அதன் காரணமாகத்தான் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை விட சனிப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் தங்கி இருந்து, 12 ராசிகளுக்கும் பலன்களை தரக்கூடியவர்.

இந்நிலையில் இவர் இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் சில முறை வக்கிர பெயர்ச்சி மற்றும் மீண்டும் நேராக நகர்தல் என தன் இயக்கத்தை கொண்டிருப்பார்.

அந்த வகையில் தற்போது கும்ப ராசியில் உள்ள கடைசி நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஜூன் 30 ஆம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி என்னும் பின்னோக்கி நகர உள்ளார். தொடர்ந்து அக்டோபர் 5 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து சதயம் நட்சத்திரத்திற்கு வர உள்ளார்.

அதன் பின்னர் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி சனியின் வக்ர காலம் முடிவுக்கு வரும். சனிப்பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு இந்த சனி பகவானின் வக்ர காலத்தில் தொழில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும் பணக்கஷ்டம் தீரும். கடுமையான நெருக்கடியில் இருந்து வந்த வர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்.

சனி பகவான் வக்ர நிலையில் இருக்கக்கூடிய இரண்டரை மாத காலத்தில் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள்.

Leave a Comment