கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து – 11 நாள் டீ செலவுக்கு ரூ.27.51 லட்சமா ?

தற்போது கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு 1 நாள் டீ செலவுக்கு ரூ.27.51 லட்சம் செலவானதாக தற்போது கணக்கு கட்டப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள மண்புழு உரம் மையம் அருகே உள்ள திறந்தவெளி குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தீ விபத்தில் ஏற்பட்டது.

இதில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்ததால், கோவை மாநகராட்சி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.Coimbatore Vellalore garbage dump yard fire accident

அத்துடன் இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தீயைக் கட்டுப்படுத்தவும், அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீயை அணைக்கும் பணியில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 15 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

சுமார் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் எட்டு ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் இரண்டு மண் அள்ளும் இயந்திரங்கள் உட்பட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – கூகுள் மேப்ஸ் கொடுத்த அசத்தல் அப்டேட் !

அந்த வகையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த தீ விபத்தை தொடர்ந்து,

தீயை அணைப்பத்திற்கான கணக்குகள் குறித்து மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மொத்தம் தீயணைப்பு பணிக்காக செலவு செய்யப்பட்ட தொகையாக ரூ.76.70 லட்சம் எனவும், 11 நாள் டீ, காபி, உணவு உள்ளிட்டவை வாங்கியதற்கு மட்டும் ரூ.27.51 லட்சம் என கணக்கு காட்டப்பட்டுள்ளது.

Leave a Comment