தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டம் 2024 – காவல்துறை விதித்த முக்கிய கட்டுப்பாடுகள் – டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை !

வரும் செப்டம்பர் 7ம் தேதி தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டம் 2024 நடைபெற உள்ள நிலையில் காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ganesh chaturthi 2024

வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் விநாயகர் சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டிருப்பதாவது வரும் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை தொடர்ந்து தமிழகத்தில் காவல்துறை சார்பில் சில கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அறிவிப்பின் படி விநாயகர் சிலைகள் அமைக்கும் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

அந்த வகையில் ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள் மற்றும் ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி கிடையாது.

அத்துடன் பிற மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் நிறுவ அனுமதி கிடையாது. மேலும் மாற்று மதத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பக் கூடாது.

முக்கியமாக விநாயகர் சிலைகளை வைக்க போலீஸ் உதவி கமிஷனர், ஆர்டிஓ அல்லது துணை கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

மேலும் தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் நிருவப்பப்படும் விநாயகர் சிலைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து பொது இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் சிலைகள் வைப்பது அவசியம். மேலும் ஒலிபெருக்கியில் வைப்பதற்கு காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

அத்துடன் மின்சாரம் பெறுவதற்கான விபரத்தையும் கடிதம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.

இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவில் விநாயகர் சிலைகளை மினி லாரி டிராக்டர் மூலம் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் மாட்டு வண்டி அல்லது மூன்று சக்கர வாகனங்களில் எடுத்துச் அனுமதி வழங்க கூடாது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மாற்றம் – வெளியான முக்கிய அறிவிப்பு !

மேலும் சமூக விரோதிகளால் விநாயகர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை போலீசார் தடுக்க வேண்டும். குறிப்பாக பதற்றமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் அங்கு சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க கூடாது.

அத்துடன் மசூதிகளில் தொழுகை நேரங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது என்றும் பதற்றமான பகுதிகள் வழியாகவும்,

மற்ற வழிபாட்டு தலங்களை ஊர்வலம் கடந்து செல்லும்போது மேளதாளங்கள் இசைக்கவும் பட்டாசுகளை வெடிக்கவும் அனுமதி கிடையாது.

இதனையடுத்து ஊர்வலம் செல்லும் பாதையில் காவல்துறையின் உரிய அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பது, கொடிகள் கட்டுவதையும் அனுமதிக்க கூடாது.

வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகளை வரும் 30ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment