‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ – தவெக பாடலில் இடம்பெற்ற அண்ணா மற்றும் எம்ஜிஆர் படங்கள் !

தற்போது வெளியிடப்பட்ட தவெக பாடலில் இடம்பெற்ற அண்ணா மற்றும் எம்ஜிஆர் படங்கள் ‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ என்ற வாசகத்தை குறிக்கும் வகையில் படங்கள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். அதன் முக்கிய நிகழ்வான கட்சியின் கொடி மற்றும் அதிகாரபூர்வ பாடலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியினை ஏற்றி பாடலை அறிமுகம் செய்தார். Tamilaga Vetri Kazhagam party song release

இந்த நிகழ்ச்சியில் விஜயின் தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியயோர் கலந்து கொண்டனர். அத்துடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்ட ‘தமிழன் கொடி தலைவன் கொடி’ என்ற பாடல் விஜயின் அரசியல் வருகை குறித்தும், தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

அத்துடன் அந்த பாடலில் ‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நிலையில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் விஜய் படங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

‘தமிழன் கொடி தலைவன் கொடி’ – தமிழக வெற்றிக்கழகம் கட்சி பாடலில் இடம்பெற்ற வரிகள் !

அண்ணா மற்றும் எம்ஜிஆர் போன்ற இருபெரும் அரசியல் தலைவர்களை தொடர்ந்து மூன்றெழுத்து கொண்ட விஜய் வெற்றி பெறுவார் என்பதை பறைசாற்றும் விதமாக தமிழக வெற்றிக்கழகத்தின் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

Leave a Comment