மெரினா நீச்சல்குளத்தை மாநகராட்சி பராமரிக்கும் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் !

தற்போது மெரினா நீச்சல்குளத்தை மாநகராட்சி பராமரிக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஒரு வார காலத்தில் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள மெரினா நீச்சல் குளமானது இன்னும் ஒரு வார காலத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

தற்போது சென்னை மாநகராட்சி பராமரிப்பில் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் இருக்கின்றன. மேலும் இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் வழங்கப்பட்டு வந்தது.

அத்துடன் இங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு பொதுமக்கள் நீச்சல் அடிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இதற்கிடையில் தனியார் நீச்சல் குளங்களை முறையாக பராமரிக்கவில்லை என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என புகார்கள் எழுந்தன.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நீச்சல் குள பணியாளரின் கவனக்குறைவால் மை லேடி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் 8 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தான்.

அதன் காரணமாக இந்த நீச்சல் குளங்களில் பொதுமக்கள் நீச்சலடிக்கத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மெரினாவில் உள்ள நீச்சல் குளம் பராமரிப்பின்றி கிடந்துள்ளது. அதன் பின்னர் அண்மையில் மெரினா கடற்கரையை தூய்மைப் படுத்தும் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு – திருமாவளவன் தகவல் !

மேலும் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்ததாவது, சென்னை மெரினா நீச்சல் குளத்தில், சுத்தமான தண்ணீர் தடையின்றி வருவதற்கான ஏற்பாடுகள்,

நீச்சல் குளம் அதனைச் சுற்றிலும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், நீச்சல் பயிற்சி மேற்கொள்வோருக்கான வசதிகள்,

கழிவறை, உடை மாற்றும் அறைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்தில் நீச்சல் குளம் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக இயக்கி மற்றும் பராமரிக்கும் பணிகளில் ஈடுபடும் என அவர் தெரிவித்தார்.

Leave a Comment