துணை முதல்வர் உதயநிதி டி-ஷர்ட் விவகாரம் – புதிய மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !

தற்போது துணை முதல்வர் உதயநிதி டி-ஷர்ட் விவகாரம் தொடர்பாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளையும் விசாரிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னம் பொறித்த டி ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது.

அந்த வகையில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகள் வகுக்கக் கோரியும் மேலும் இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டீ சர்ட் அணிந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளையும் விசாரிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

துணை முதல்வர் உதயநிதி தொடர்பான இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஒரே விவகாரத்துக்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என கேள்வி எழுப்பினர்,

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி – அவரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு !

அத்துடன் இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு முதலில் தாக்கல் செய்த வழக்கில் இடையீட்டு மனுதாரர் சேர்க்க கோரலாம் எனத் தெரிவித்தனர்.

அந்த வகையில் இரு மனுக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தனர்.

Leave a Comment