இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி: 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!!!
மெல்பர்னில் நடைபெற்று வந்த இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி -யில் 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 வது டெஸ்ட் போட்டி தற்போது மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம் (140 ரன்கள்) அடித்தார். அதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் வெறும் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி: 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!!!
அதுமட்டுமின்றி புது வீரராக நிதிஷ் குமார் ரெட்டி சதம் (114 ரன்) அடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். அதன்பின்னர் நடந்த 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. அதன்படி, ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் தொடக்கத்திலேயே ஆட முடியாமல் திணறி வந்தனர்.
ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்.., என்ன காரணம் தெரியுமா?
மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா 40 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 9 ரன்னில் வெளியேறினார். ஆனால் ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தார். இதையடுத்து விராட் கோலியும் 5 ரன்னில் வெளியேறி இந்திய அணி தோல்வியை தழுவும் பக்கத்தில் நெருங்கியது. ரிஷப் பண்ட் 30 ரன்களும், ஜெய்ஸ்வால் 84 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால், இந்திய அணி வெறும் 155 ரன்களுக்கு சுருண்டு 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!
PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் – இஸ்ரோ அறிவிப்பு!
அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!
2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!
2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே