நடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!
சூரியின் மாமன் திரைப்படம்:
காமெடி நடிகராக இருந்து பல படங்களில் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சூரி கருடன் படத்திற்குப் பிறகு ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GER TAMIL CINEMA NEWS
மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர்.
நடிகர் சந்தானம் நடித்த DD Next Level படத்தின் ரிலீஸ் அறிவிப்பு! முழு விவரம் இதோ!
டிரெய்லர் வெளியீடு:
மேலும் இந்த திரைப்படமானது ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘மாமன்’ உருவாகி இருக்கிறது.
இப்படம் வரும் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையிலபடத்தின் டிரெய்லரை படக்குழு அதிகாரபூர்வமக வெளியிட்டுள்ளது.