மதராஸி திரைப்படம்:
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது படமான மதராஸி என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் மதராஸி படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவு:
இதனையடுத்து சமீபத்தில் மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மேலும் மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட காட்சியை இலங்கையில் படக்குழு கடந்த இரண்டு வாரங்களாக காட்சிப்படுத்தி வந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் வித்யுத் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே உள்ள சண்டை காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது பராசக்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!