ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2025: அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தினை SC(A)/ W/ DW எனும் இன சுழற்சி முறையில் நிரப்புவதற்கான அறிவிக்கை எண்.அ1/2144/2025 நாள்:30.08.2025ன்படி இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்படாத காரணத்தினால் அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016ல் பிரிவு-26 மற்றும் 27-ன் அடிப்படையில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின்கீழ் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை பூர்த்தி செய்யும்/ நிரப்பும் பொருட்டு SC(A)/ W எனும் இனசுழற்சியில் தகுதியான நபர்களிடமிருந்து 06.11.2025 முதல் 20.11.2025 வரை அஞ்சல் வழி/ நேரடியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிட விவரம் பின்வருமாறு.
ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2025
| பதவி | ஈப்பு ஓட்டுநர் |
|---|---|
| ஊதியம் | ரூ.19500-71900 Level-8 |
| வயது | 18-42 |
| மொத்த பணியிடங்கள் | 01 |
| கல்வித்தகுதி | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
தகுதியான விண்ணப்பதாரர்கள் https://cuddalore.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்ந்தி செய்து, கல்விதகுதி, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், முன் அனுபவசான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பித்திட வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றி நிராகரிக்கப்படும்.
சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10 x4 inches postal (cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின்படியே நியமனம் மேற்கொள்ளப்படும்
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்..
| பதவி | இரவு காவலர் |
|---|---|
| ஊதியம் | 15700 to 58100 Level-1 |
| வயது | 18-37 |
| கல்வித் தகுதி | தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
| அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
Cuddalore Rural Development Unit Recruitment 2025
| அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் ஓட்டுநர் | Driver – Application Form (700 KB) |
| விண்ணப்ப படிவம் காவலர் | NW – Application Form (649 KB) |