பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் MTS வேலைவாய்ப்பு 2025! எட்டாம் வகுப்பு போதும் | ஊதியம் ரூ.10,000/-

பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் MTS வேலைவாய்ப்பு 2025: கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்கீழ் சகி ஒருங்கிணைந்த சேவைமையத்தில் (OSC) 181 தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் 24X7 பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சுசெய்து 21.11.2025 பிற்பகல் 5.45 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இப்பதவிக்கான மாதிரி விண்ணப்பம் கரூர் மாவட்ட இணையதளத்தில் https://karur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் MTS வேலைவாய்ப்பு 2025

பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper)

  1. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்,
  2. எட்டாம் வகுப்பு பயின்ற பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  3. 3 ஆண்டுகள் பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  4. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர்.
  5. சுழற்சி முறையில் பணியாற்றிட வேண்டும்
  6. 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
  7. மாத ஊதியம் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வழங்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மீ.தங்கவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வ இணையதளம்Click here
அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here

Also Read: ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 62,000!

Leave a Comment