Velaivaippu Seithigal 2025: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின்கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் நிலையிலான காலிப்பணியிடங்களை SC(A) / W / DW எனும் இன சுழற்சி முறையில் நிரப்புவதற்கான அறிவிக்கை எண்:அ1/2906/2025, நாள்:30.08.2025ன் மூலம் வெளியிடப்பட்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025
இந்நிலையில் SC(A) | W | DW என்ற இனசுழற்சியின் கீழ் தகுதியான விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படாத்தால் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016ல் பிரிவு 26 மற்றும் 27ன் அடிப்படையில் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்
மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு SC(A) / Woman எனும் இனசுழற்சியில் தகுதியான நபர்களிடமிருந்து 06.11.2025 முதல் 20.11.2025 வரை நேரடியாகவும் / அஞ்சல் வழியாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் – https://viluppuram.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் – சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பித்திட வேண்டும்.
Also Read TN Govt Jobs: வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
நிர்ணயிக்கப்பட்டுள்ள இனசுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலக்கெடு முடிவுற்று பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முன்னறிவிப்பு ஏதுமின்றி நிராகரிக்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு குறித்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தகுதி திறன் தகவல்கள் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
| Panchayat Raj Recruitment | அலுவலக உதவியாளர் | இரவுக்காவலர் |
|---|---|---|
| ஊதியம் | ரூ.15700-58100 | ரூ.15700-58100 |
| வயது | 18-37 | 18-37 |
| அதிக பட்ச வயது | 37 | 37 |
| மொத்த பணியிடங்கள் | 1 | 1 |
| கல்வி தகுதி | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி | Tamil எழுதப் படிக்க |