நடிகர் தனுஷ் “குபேரா” திரைப்படம்:
இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் “குபேரா”. மேலும் இது தனுஷின் 51ஆவது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது குறிப்பிடத்தக்கது.
குபேரா திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டீஸர் வெளியீடு:
மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடலான ‘போய்வா நண்பா’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் குபேரா திரைப்பட கிரைம் திரில்லர் பாணியில் டீசர் காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது. அத்துடன் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியிட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. மேலும் பான் இந்தியா அளவில் உருவாகி உள்ள ‘குபேரா’ படத்தின் ஓ.டி.டி. உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!