நடிகர் சந்தானம் நடித்த DD Next Level படத்தின் ரிலீஸ் அறிவிப்பு! முழு விவரம் இதோ!

சந்தானம் நடிப்பில் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான DD Next Level உருவாகியுள்ளது. அந்த வகையில் முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் இணைந்து கீத்திகா திவாரி, யாஷிகா, கஸ்தூரி,பிரமாஜி, நிழல்கள் ரவி, ஷா ரா, லொல்லு சபா மாறன், ராஜேந்திரன், லொல்லு சபா ஜீவா மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தை நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் மற்றும் நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான` தி பீபுல் ஷோ’ இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது DD Next Level திரைப்படம் வரும் மே மாதம் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்த நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் இந்த DD Next Level திரைப்படத்தில் சந்தானம் ஒரு Youtube விமர்சகர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment