விஜய் சேதுபதி நடித்த ACE திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் 50 – வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. அந்த வகையில் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார்.

அந்த வகையில் இதற்கு முன் இயக்குநர் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. மேலும் இப்படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் படத்தின் டிரெய்லர் வரும் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என படக்குழு போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளது.

அத்துடன் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றதுகுறிப்பிடத்தக்கது. மேலும், ACE திரைப்பட வரும் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Comment