கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் – அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !

தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி கள்ளசாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த விஷ சாராயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 49 ஐ கடந்துள்ளது. இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

இந்த நிலையில் இந்த கள்ளக்குறிச்சியில் விஷ சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து சட்டசபையில் பிரச்சனை எழுப்ப அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment