AIASL Srinagar Recruitment 2024 ! 55க்கும் மேற்பட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
AIASL Srinagar Recruitment 2024. AI விமான நிலைய சேவைகள் நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ளது, இது இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒரு முன்னணி தரை கையாளுதல் சேவை வழங்கும் நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனம் 82க்கும் அதிகமான விமான நிலையங்களுக்கு சேவை அளிக்கிறது. தற்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட நேரடி நேர்காணல் நடத்துகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
AIASL Srinagar Recruitment 2024
நிறுவனம்:
AI விமான நிலைய சேவைகள் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
ஸ்ரீநகர்
காலிப்பணியிடங்கள் பெயர்:
கடமை அதிகாரி (Duty Officer)
இளநிலை அதிகாரி – தொழில்நுட்பம் (Jr. Officer – Technical)
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Customer Service Executive)
கைவினைஞர் (Handyman)
சரிவு சேவை நிர்வாகி/பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை டிரைவர்
(Ramp Service Executive/Utility Agent Cum Ramp Driver)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
கடமை அதிகாரி – 3
இளநிலை அதிகாரி – தொழில்நுட்பம் – 2
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – 12
கைவினைஞர் – 30
சரிவு சேவை நிர்வாகி/பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை டிரைவர் – 8
மொத்த காலியிடங்கள் – 55
தகுதி:
கடமை அதிகாரி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று, 12 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
இளநிலை அதிகாரி – தொழில்நுட்பம் – பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும், இலகுரக மோட்டார் வாகனம் வைத்திருக்க வேண்டும், மேலும் கனரக மோட்டார் வாகனம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கைவினைஞர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், ஆங்கிலம் படிக்கவும் புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.
சரிவு சேவை நிர்வாகி- இயக்கமுறை சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ படித்திருக்கவேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்கவேண்டும் மற்றும் அசல் செல்லுபடியாகும் கனரக மோட்டார் வாகனம் வைத்திருக்க வேண்டும்.
பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை டிரைவர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் செல்லுபடியாகும் கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
NDMA புதிய ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு ! பாதுகாப்பு அல்லது காவல் துறையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் !
வயது வரம்பு:
கடமை அதிகாரி – 50 வயது
இளநிலை அதிகாரி தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை நிர்வாகி, கைவினைஞர், சரிவு சேவை நிர்வாகி, பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை டிரைவர் –
28 வயது (தளர்வு OBC – 3 ஆண்டுகள், SC/ST – 5 ஆண்டுகள்)
சம்பளம்:
கடமை அதிகாரி – ரூ.32,200/-
இளநிலை அதிகாரி – தொழில்நுட்பம் – ரூ.29,760/-
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி – ரூ.24,960/-
கைவினைஞர் – ரூ.18,840/-
சரிவு சேவை நிர்வாகி- ரூ.24,960/-
பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை டிரைவர் – ரூ.21,270/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணலுக்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பபடிவம், தேவையான ஆவணங்களின் நகல், விண்ணப்பக்கட்டணத்தின் ரசிது எடுத்து செல்லவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST மற்றும் முன்னாளபடைவீரர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு ரூ.500/-
நேர்காணலின் விபரம்:
கடமை அதிகாரி, இளநிலை அதிகாரி தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பதவிகளுக்கு –
26.02.2024 & 27.02.2024 அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை
கைவினைஞர், சரிவு சேவை நிர்வாகி, பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை டிரைவர் பதவிகளுக்கு –
28.02.2024 & 29.02.2024 அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்:
சல்சபீல் கல்வி இன்ஸ்டிட்யூட்,
ஹம்ஹாமா,
வார்டு எண் 33
புத்கம் – 190021
முக்கிய குறிப்பு:
நியமனங்கள் நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் 3 வருடங்களுக்கு மட்டுமே.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.