டெல்லியின் புதிய முதல்வரை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு !

தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதை தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வரை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதனை தொடர்ந்து புதிய முதல்வருக்கான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்க இருபத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ யால் கைது செய்யப்பட்டிருந்த மாநில டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், டெல்லி முதல்வர் பதவியை தொடர முடியாத அளவுக்கு பல்வேறு நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியையே ராஜினாமா செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், தற்போது கல்வி துறை அமைச்சராக உள்ள அதிஷியை அடுத்த டெல்லி முதல்வராக பரிந்துரை செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால் என தகவல் வெளியாகி உள்ளது.

தந்தை பெரியார் பிறந்தநாள் தவெக தலைவர் விஜய் வாழ்த்து – பெரியார் பாதையில் பயணிப்போம் என உறுதி !

மேலும் அவர் ஆம் ஆத்மி கட்சியின் புதிய சட்டமன்ற குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் துணை நிலை ஆளுநரை சந்திக்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவதுடன், புதிய முதல்வருக்கான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்க இருபத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment