பிக்பாஸ் செட் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்து – ஒருவர் படுகாயம் !

தற்போது பிக்பாஸ் செட் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் ஆகும். இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 7 சீசன்களை கடந்து தற்போது 8 வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்த பிக்பாஸ் 7 சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுப்பாளராக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனையடுத்து தற்போது நடைபெற இருக்கும் 8 வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் வரும் அக்டோபர் மாதம் 6 ம் தேதி பிக்பாஸ் ஒளிபரப்பாக உள்ளது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சென்னை பூந்தமல்லி அருகே பிக்பாஸ் சீசன் 8 நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செட் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

பிரபல யூடியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு – பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை !

மேலும் காயம் அடைந்த தொழிலாளி சாயின்கான் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தற்போது அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் படப்பிடிப்பு தளத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment