சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் – அதிகாரிகள் நடவடிக்கை !

சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் கருவின் பாலினத்தை வீடியோவில் வெளியிட்டார். அதற்க்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இதை போன்று ஒரு சம்பவம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் (Cadence) வயிற்றில் உள்ள கருவின் பாலினத்தை தெரிவித்ததாக மருத்துவமனை மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று ‘நோ பார்க்கிங்’, இன்று ‘சீட் பெல்ட்’ – அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்

மேலும் அனுமதியின்றி கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்தது, அத்துடன் கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அவசரகால மருத்துவர்கள் இல்லாதது உள்ளிட்ட 11 காரணங்களுக்காக சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment