சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை ! ரூ.100 கட்டணம் செலுத்தி அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் !

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் சேவையால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளுக்கு அல்லது பொது இடங்களுக்கோ சென்று வர பெரும் உதவியாக இருக்கிறது. மேலும் மெட்ரோவில் புறநகர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் வசதியும் உள்ளது. தற்போது இரண்டு வழித்தடங்கள் மூலமாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சுற்றுலா அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோவில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

இதனையடுத்து ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோவில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும் ரூ.150 செலுத்தி ரூ.100 சுற்றுலா அட்டை பெற்று திருப்பி செலுத்தியவுடன் ரூ.50 வைப்பு தொகை தரப்படும் என மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிப்பது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment