கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி – சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபைக்கு சென்று வழிபட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நடராஜர் கோவிலில் பகதர்கள் கனகசபைக்குள் சென்று வழிபட தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசனம் போன்ற இரு விழாக்களும் தொன்று தொட்டு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் உள்ள கனகசபை பகுதியில் தீட்சிதர்கள் மட்டுமே சென்று வந்த நிலையில்,

அத்துடன் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கனகசபை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசின் உத்தரவுகள் இருந்தாலும் தீட்சிதர்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபைக்கு சென்று வழிபட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் – மத்திய அரசு அனுமதி !

இதனையடுத்து ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி வரும் ஜூலை 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பூஜை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பக்தர்களுக்கு கனகசபை மீது ஏறி வழிபாடு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment