கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையிலும், கோடை விடுமுறை காரணமாகவும் ஊட்டிக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஊட்டிக்கு காரில் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு பஸ்களில் ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

மேலும் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் ஊட்டி செல்ல அதிகளவு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு 30 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட கோட்ட போக்குவரத்து கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களுடன் சேர்ந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு 10 சிறப்பு பஸ்களும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை ! தேசிய தேர்வு முகாமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

இவற்றை தவிர கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களுடன் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் மேலும் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment