நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர் – காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர். நெல்லை மாவட்டத்தில் தள்ளுவண்டியில் இயங்கி வரும் சமோசா கடையில் உள்ள கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் டவுண் வடக்கு ரத வீதியில் சமோசா கடை செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் இந்த கடையானது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று மாலை அங்கு பயன்படுத்தப்பட்டு வந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் திடீரென சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2024 – இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை !

மேலும் கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சிலிண்டர் வெடி விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சிலிண்டர் வெடித்ததில் கடை எரிந்து நாசமானது இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment