கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம். தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையில் இருந்து அதிக தொலைவில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதை தவிர்த்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம் :
சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம் காரணமாக அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புறநகர் பேருந்து நிலையமானது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்ல சென்னையில் இருந்து முறையான பேருந்து வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் பலர் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதை தவிர்த்துவிட்டு சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் பகுதியிலிருந்து இயக்கப்படும் மின்சார ரயிலையே அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் திருவண்ணாமலை செல்ல கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் – முழு தகவல் இதோ !
இதன் படி நாள் ஒன்றுக்கு 85 பேருந்துகள் வீதம் கோயம்பேட்டிலிருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23 ஆம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிப்பிடத்தக்கது.