டெல்லி அரசின் மதுபான கொள்கை பண மோசடியில் ஈடுபட்டதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விஷயமாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மறுபடியும் முதல இருந்தா? லியோ பட இயக்குனர் மீது திடீர் வழக்கு.., மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!!
ஆனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதை கண்டுக்காமல் இருந்து வந்துள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை சுற்றி இன்று ஏகப்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரின் வீட்டை சோதனை நடத்தி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.