டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

சென்னை வானிலை மையம் வருகிற ஜனவரி 11ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சமீபத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், தற்போது ஒரு சில பகுதிகளில் இன்னும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காலையில் பனி மூட்டம் காணப்படும். அதுமட்டுமின்றி நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக ஜனவரி 11ம் தேதி காவிரி டெல்டா பகுதிகளில், தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும். மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரமும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி வரை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!

ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?

கலைஞர் மகளிர் உரிமை தொகை.., 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000.., உதயநிதி அறிவிப்பு!!!

அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.01.2025)! மாவட்ட வாரியாக Power Cut News!

Leave a Comment