Home » செய்திகள் » தீபாவளி பண்டிகை 2024  – அக்டோபர் 31ல் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

தீபாவளி பண்டிகை 2024  – அக்டோபர் 31ல் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

தீபாவளி பண்டிகை 2024  - அக்டோபர் 31ல் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

தீபாவளி பண்டிகை 2024: மக்களால் ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. இந்த வருடம் வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக மக்கள் ஆடைகள், பட்டாசுகள் வாங்க ஆரம்பித்து விட்டனர்.

தீபாவளி பண்டிகை 2024

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சில நாட்களுக்கு ஆரம்பித்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் 2024 தீபாவளி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அன்று மழை பொழியுமா என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.

ஏனென்றால் தீபாவளி பண்டிகை வியாபாரத்தை நம்பி இருக்கும் மக்கள் தான் கடும் அவதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ” தீபாவளி பண்டிகை அன்றும் சரி, அதற்கு முந்தைய நாட்களிலும் சரி மழை பொழிய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனென்றால் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் அக்டோபர்  21-ம் தேதி உருவாகும். அப்போது காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக அக்டோபர் 23ம் தேதி வலுப்பெறும்.

சென்னையில் (18.10.2024) இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

இதையடுத்து, வடக்கு ஆந்திரா – வங்காளதேசம் இடையே கரையை கடக்க இருக்கிறது. எனவே இப்படி கரையை கடந்தால் அடுத்த நிகழ்வு உருவாக ஒரு வாரம் எடுக்கும்.

இதனால் அக்டோபர் 22 தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் கோடை காலம் போல வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட் 

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி

புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top