தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன் – மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் மற்றும் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இதனை தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் பொது குளறுபடிகள் நடைபெற்றதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியிருந்தார்.

தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மதியம் 3.30 மணியளவில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு அளிக்க உள்ளார்.

பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி ! தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் !

மேலும் மறுவாக்கு எண்ணிக்கை கோரி ஏற்கனவே தேமுதிக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment