சென்னையில் காவலர்களை குடிபோதையில் ஆபாசமாக பேசிய ஜோடி – போலீசார் நடவடிக்கை !

சென்னை மெரினா கடற்கரையில் பணியில் இருந்த சென்னையில் காவலர்களை குடிபோதையில் ஆபாசமாக பேசிய ஜோடி தற்போது காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினா லூப் சாலையில் கார் ஒன்று கடற்கரை நோக்கிச் செல்ல முற்பட்டது. இதனையடுத்து அப்போது அங்கு பணியிலிருந்த காவலர்கள் கடற்கரைக்குச் செல்ல தற்போது அனுமதி இல்லை என்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காரின் உள்ளே வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவரும், மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி என்வரும் இருந்துள்ளனர். அத்துடன் இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய இருவரும், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை ஆபாசமாகவும் தரைகுறைவாகவும் பேசியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அப்போது பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை ஒருமையில் அழைத்து முகசுழிக்கும் வகையிலான வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

மேலும், ‘இந்த பகுதி பெண் ஆய்வாளர் ஒருவர் என்னைப் பார்த்தாலே, ஐய்யா! வரங்கய்யா என்று வணக்கம் வைத்துவிட்டு ஓடும்.’ என்று பேசினார். அத்துடன் இவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை காவலர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் நடிகை கவுதமிக்கு புதிய பதவி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

இதனையயடுத்து காவலர்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் இவர்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மேலும் வீடியோவில் இருந்த கார் எண்ணைக் கொண்டு தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான் இவர்கள் இருவரையும் துரைப்பாக்கத்தில் வைத்து கைது செய்த போலீசார் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment