கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை – தேவர் குருபூஜை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குரு பூஜைக்கு மானாமதுரை – மதுரை வழித்தடத்தில் ஏராளமானோர் வரக்கூடும் என்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை :
சிவகங்கை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவின்பொழுது ஆண்டுதோறும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை, காளையார் கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் டாஸ்மாக் கடைகள் இயங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
கீழடி அருங்காட்சியத்திற்கு விடுமுறை :
அந்த வகையில் தேவர் குருபூஜை விழா காரணமாக திருப்புவனம் அருகே செயல்படும் கீழடி அருங்காட்சியகத்திற்கு வரும் அக்.30ம் தேதி விடுமுறை என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தவெக மாநாட்டில் பட்டாசு வெடிக்க தடை – தொண்டர்களுக்கு தலைமை உத்தரவு !
மேலும் கமுதியில் அக்.30ல் குரு பூஜைக்கு மானாமதுரை – மதுரை வழித்தடத்தில் ஏராளமானோர் வரக்கூடும் என்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.