அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்.., போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் பேருந்தை இயக்கும் அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.

சஸ்பெண்ட்:

தற்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக அதில் உயிரிழப்புகளும் அதிகமாக நேர்ந்து வருகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஒட்டி வருகின்றனர். இதனால் தான் அதிக விபத்துக்கள் நடந்து வருகிறது.  எனவே இது போன்ற விபத்துகளை குறைக்கும் விதமாக, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தியதை கட்டுப்படுத்த புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் MOBILE யூஸ் செய்தால், அவர்களுக்கு முதற்கட்டமாக சுமார் 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தும் விதமாக  பல்வேறு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படி அவர்கள் செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்குவதால், பயணிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த விதிமுறையை கடைப்பிடிக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துத் துறை அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.12.2024)! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் – வீடியோ வைரல்!!

தியேட்டரில் பாதியில் கிளம்பினால் Refund?.., குஷியில் சினிமா பிரியர்கள்!!

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரஷீத் கான்? .., அப்ப ஹர்திக் பாண்டியா? .., அம்பானி போட்ட மாஸ்டர் பிளான்?

பாஜக அண்ணாமலை அதிரடி கைது…, வெளியான ஷாக்கிங் தகவல்!!

Leave a Comment