AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025.., விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!

மத்திய அரசு கொண்டு வந்த AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025 மூலம் விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாக மடிக்கணினி(லேப்டாப்) ஒவ்வொரு மாணவரின் கல்விக்கான முக்கியமான கருவியாக விளங்கி வருகிறது. அதன்படி, அரசாங்கம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மூலம் ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எனவே இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்குகிறது. மேலும் தொழில்முறை மேற்கொள்பவர்களுக்கு,   இளங்கலை அல்லது உயர்நிலைப் படிப்புகளைத் தொடரும் மாணவர்களுக்கும் இந்த மடிக்கணினி முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

AICTE திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

  • AICTE-அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • வாழ்வில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதன் மூலமாக டிஜிட்டல் மூலம் கற்றல் திறனை வளர்க்கவே இந்த திட்டமாகும்.
  • மேலும், இதில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான உரிய நிதியை மத்திய மாநில அரசுகள் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் கார்டு
  • கல்வி சான்றிதழ்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • வங்கி கணக்கு
  • வருமான வரி சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை:

ஒரு மாணவன் ஒரு லேப்டாப் திட்டத்திற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என 2 வழிகளில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். எனவே ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நினைத்தால் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க நினைத்தால்,  படிக்கும் கல்லூரிகளில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

குறிப்பு:

விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம்  ₹2,50,000 மேல் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் – டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!

தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!

என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

Leave a Comment