அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது – நீதிபதி சந்துரு குழு அறிக்கை !

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதி மற்றும் இன உணர்வுகளால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழுவானது தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளனர். அந்த அறிக்கையில்,

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் என்ற பெயர்களை அரசுப் பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

அத்துடன் பள்ளி அமைத்துள்ள பகுதிகளில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களை பள்ளியின் அலுவலர்களாக நியமிக்க கூடாது என்றும்

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனம் 2024 – டெண்டர் வெளியீடு !

இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்களிடையே சாதி, மத வன்முறைகளை தவிர்ப்பதற்காக வழிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்ட குழு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

Leave a Comment