திரைப்படமாகிறது கிரண் பேடியின் வாழ்கை வரலாறு – ட்ரீம் ஸ்லேட் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு !

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பணியாற்றிய கிரண் பேடி பற்றி திரைப்படமாகிறது கிரண் பேடியின் வாழ்கை வரலாறு, இதுகுறித்து ட்ரீம் ஸ்லேட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் சில காலம் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிரண் பேடியின் வாழ்கை கதையை மையமாக வைத்து ‘பேடி’ என்ற பெயரில் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. அந்த வகையில் ட்ரீம் ஸ்லேட் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பேடி திரைப்படத்தை குஷால் சாவ்லா இயக்குகிறார்.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான டாக்டர் கிரண் பேடியின் வாழ்க்கையை விவரிக்கிறது என்றும், மேலும் இந்த திரைப்படத்தில் வாயிலாக சொல்லப்படாத சம்பவங்கள்,

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

தனிப்பட்ட மற்றும் தொழில்சார்ந்த சவால்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தில் டாக்டர் பேடியின் புகழ்பெற்ற வாழ்க்கையை வரையறுத்த அசைக்க முடியாத உறுதிப்பாடு போன்றவற்றை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment