வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் நல்லதா: பொதுவாக தேன் கூட்டில் உள்ள தேனை எடுத்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட தேன் கூடு மனிதர்கள் கால் தடம் படாத இடங்களில் தான் முதலில் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது வீட்டில் கூட இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி அப்படி தேன் கூடு வீட்டிலோ அல்லது வீட்டு பக்கத்தில் இருந்தாலோ நமக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்குமாம். அதோடு சேர்த்து கடன் தொல்லைகளும், வறுமையும் நம்மை வந்து சேரும் என்பார்கள். இப்படி இருக்கையில் இந்த இனத்தை சேர்ந்த குளவிகள் கூடு கட்டினால் மட்டும் நல்லது என்று கூறுகின்றனர்.
நம் வீட்டின் முக்கிய இடமாக இருக்கும் பூஜை அறையில் குளவிகள் கூடுகள் கட்டினால் அது மிகவும் நல்லது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அதுவும் வடகிழக்கு மூலையில் கூடு கட்டினால் இன்னும் சிறப்பு. இதன் மூலம் பல நன்மைகள் சேரும். இதனால் எக்காரணம் கொண்டு குளவி கூடுகளை கலைத்து விடக்கூடாது. ஆனால், சமையலறையில் கூடுகளை கட்டிவிட்டால் உடனடியாக கலைக்க வேண்டும். ஏனென்றால் சமையலறையில் கூடு கட்டினால் நம்முடைய பணபலத்தை பலவீனமாக்கி, வறுமைக்கு தள்ளிவிடுமாம்.
வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் நல்லதா
அதுமட்டுமின்றி ஒரு வீட்டில் புதிதாக குளவிகள் கூட்டை கட்டி விட்டு கொஞ்ச நாட்களில் அதிலிருந்து வெளியேறி விட்டால், அந்த வீட்டில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று அர்த்தமாம்.
எனவே இது அபசகுணமாகவும் கருதப்படுவதால், உடனே அந்த கூட்டை கலைத்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.
மேலும் அதேபோல குழந்தைகளுக்கு கை எட்டும் இடத்தில் எதிர்பாராமல் குளவி கூடு கட்டி விட்டால், அந்த கூட்டை கலைத்து விட வேண்டும்.
Also Read: அரைஞாண் கயிறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்? அடேங்கப்பா இத்தனை விஷயம் இருக்கா இதுல!!
மேலும் குளவிகள் அதன் கூட்டை கலைக்க பார்த்தால் உடனே அது நம்மை கொட்டிவிடும். இருப்பினும் விஷம் ஏறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு குளவி கொட்டிய இடத்தில் சிறிதளவு சுண்ணாம்பு வைத்தால் போதும் விஷம் ஏறாமல் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் குளவி கட்டிய இடத்தில் அப்புறப்படுத்தி அந்த இடத்தில் கோமியத்தை மீண்டும் மீண்டும் தெளித்து வந்தால், அதே இடத்தில் குளவிகள் கூடு கட்டாது.