நாடாளுமன்ற தேர்தல் 2024 ! தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் – தேர்தல் எப்போது நடைபெறும் அறிவிப்பு இதோ !
நாடாளுமன்ற தேர்தல் 2024. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள பிஜேபியின் ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS
மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு :
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வேளைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி ! குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் – முழு தகவல் இதோ !
இதன் அடிப்படையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளையோ அல்லது நாளை மறுநாளையோ அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது அதிகாரிகளை நியமிப்பது போன்ற வேலைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.