ரஜினிக்கு டூப் போட்ட மறைந்த மனோஜ் பாரதிராஜா.., வெளியான புகைப்படங்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டூப் போட்ட மறைந்த மனோஜ் பாரதிராஜா குறித்து சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மனோஜ் பாரதிராஜா:

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் நேற்று மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுபோக, கண்ணீரில் இருக்கும் பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்ல பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை தவெக கட்சி தலைவரும் நடிகருமான தளபதி விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி, அஜித் இன்னும் வந்து அஞ்சலி செலுத்தவில்லை பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பல நடிகர்கள் குறித்து மனோஜ் பேசியது இணையத்தில் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மனோஜ் நடிகர் மட்டுமின்றி ஒரு இயக்குனரும் கூட. கடைசியாக இவர் இயக்கத்தில் மார்கழி திங்கள் என்ற படம் வெளியாகி இருந்தது.

ரஜினிக்கு டூப் போட்ட மறைந்த மனோஜ் பாரதிராஜா.., வெளியான புகைப்படங்கள்!!

இந்நிலையில் மறைந்த மனோஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டூப் போட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் ஒரு சூப்பர் ஹிட் பிரமாண்ட படத்திற்கு. அட ஆமாங்க, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் எந்திரன். இப்படத்தில் ரஜினி சிட்டி கெட்டப்பில் இருக்கும் போது எதிரில் வசீகரனாக மனோஜ் தான் டூப் போட்டாராம். எனவே இப்படத்தில்,சிட்டி – வசீகரன் என இருவரும் ஒன்றாக வரும் சீன்களில் இப்படி 2 ரோல்களுக்கும் மாறி மாறி மனோஜ் டூப் ஆக நடித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இதோ..   

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!

ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!

சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!

Leave a Comment